இலங்கையில் மீண்டுமொரு தீவிரவாதத் தாக்குதல்!! அமெரிக்கா எச்சரிக்கை
#SriLanka
#America
#Attack
Yuga
4 years ago
இலங்கையில் மீண்டுமொரு தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்ற எச்சரிக்கை குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்த எச்சரிக்கை குறிப்பை அமெரிக்கா வெளியிட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் அதனை வெளியிட்டிருக்கின்றது.
இதேவேளை, தாக்குதல் நடக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தால் அது பெரும்பாலும் உண்மையாகத்தான் இருக்கும்.
அண்மையில் காபூலில் தாக்குதல் நடக்கும் என அமெரிக்கா எச்சரித்து சில மணி நேரங்களில் காபூலில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.