பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு...?
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
கனடா தேர்தல் குறித்து பிரதமர் ஜஸ்டின் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டபோது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் அறிவித்தார்.
ஆனால் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.