நேற்று கோவிட் தொற்றால் 184 பேர் மரணம்
#Death
#Covid 19
#Corona Virus
Prathees
3 years ago

கோவிட் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10504 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 470,722 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 388,278 ஆக அதிகரித்துள்ளது.



