நுகர்வோர் கொவிட் கொத்தணி அபாயம்-நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு
#Covid 19
Prasu
4 years ago

சீனி, அரிசி மற்றும் கோதுமை மா கொள்வனவு செய்யும் நுகர்வோர் கொவிட் கொத்தணியொன்று உருவாவதற்கான அபாயம் எழுந்துள்ளதாக முருத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சீனி, அரிசி மற்றும் கோதுமை மா கொள்வனவுக்காக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக, மக்கள் வரிசையில் நிற்கின்றமையினால், நுகர்வோர் கொவிட் கொத்தணியொன்று உருவாகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, சீனி, அரிசி மற்றும் கோதுமை மா ஆகியவற்றை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாத வர்த்தகர்களை கைது செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது



