ஊரடங்கை மீறி பயணித்த வாகனங்கள் பறிமுதல்

Prasu
4 years ago
ஊரடங்கை மீறி பயணித்த வாகனங்கள் பறிமுதல்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த 19 பேர் தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்கள் செலுத்திச் சென்ற வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தலவாக்கலை பொலிஸாரினால் இன்று (03) மேற்கொண்ட வீதி சோதனை நடவடிக்கையின் போதே 18 முச்சக்கரவண்டிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் இவ்வாறு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் பயணித்த மேற்படி 19 பேரையும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!