இனிமேல் தடுப்பூசி வேண்டாம்! நம்முடைய ஸ்டைலில் பார்க்கலாம் !வடகொரியா அதிபர் அதிரடி!
#Covid Vaccine
Keerthi
4 years ago
அண்டார்டிகா கண்டம் வரை பரவிய கொரோனா இதுவரை எங்கள் நாட்டில் பரவவில்லை என்று வடகொரியா அதிபர் கிம் நீண்டகாலமாக கூறி வருகிறார். தற்போது தடுப்பூசியும் வேண்டாம் என்று கூறியுள்ளார். உலகின் பல நாடுகளிலும் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முழுமையாக நீங்கியபாடில்லை. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இப்படி பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் திட்டம் மூலம் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு அனுப்பக்கூடிய தடுப்பூசிகளை வேண்டாம் என்று தன்னுடைய நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.