இலங்கையில் 12 – 18 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துமாறு GMOA கோரிக்கை
#SriLanka
#Covid Vaccine
#Student
Yuga
4 years ago
12 – 18 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார்.
தற்போது குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதற்கான சிறந்த தீர்வாக தடுப்பூசி உள்ளது.எனவே 12 – 18 வயதுடையோருக்கு தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, உலக சுகாதார அமைப்பினால் 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போடுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஃபைசர் மட்டுமே.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியை கொடுக்கலாம்.ஆகவே, 18 – 30 வயதினருக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதை விட, 12 – 18 வயதினருக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று கூறினார்.