நிதி அமைச்சர் பசில் வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு!
#Basil Rajapaksa
Prabha Praneetha
4 years ago
இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்புகள் தொடர்பில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் உள்ள 43 வெளிநாட்டு தூதர்களில் 35 வெளிநாட்டு தூதுவர்களை பசில் ராஜபக்ச இதுவரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீதமுள்ள வெளிநாட்டு தூதுவர்களை விரைவில் சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.