மட்டக்களப்பில் கைவிடப்பட்டிருந்த 3 கைக்குண்டுகள் மீட்பு

#Batticaloa #Police
Prathees
3 years ago
மட்டக்களப்பில் கைவிடப்பட்டிருந்த 3 கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு  வயல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 3 கைக்குண்டுகளை நேற்று  மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை கற்பகேணி பகுதிpயல் அமைந்துள்ள வயலிலே இந்த கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த வயல்பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று மாலை இந்த கைக்குண்டுகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைக்குண்டுகளை வெடிக்க வைத்து செயலிழப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக வவுணத்தீவு பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!