பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிக்கப்படுமா?
#SriLanka
#India
#prices
Yuga
4 years ago
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் கோருகின்றனர்.
தங்களது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், இறக்குமதி பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்காக விதிக்கப்பட்டுள்ள 25 சதம் என்ற வரியை மேலும் அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது உற்பத்திக்கு 70 முதல் 80 ரூபா வரையில் விலை இருந்தாலும்கூட, சந்தையில் அந்த விலைக்கு தங்களது உற்பத்திகளை கொள்வனவு செய்யாமல், அதனை விடவும் குறைந்த விலையில் சந்தையில் உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.