கன்னி ராசி நேயர்களுக்கான பொதுவான குணநலன்கள் மற்றும் பலன்கள்

#Rasipalan
Reha
4 years ago
கன்னி ராசி நேயர்களுக்கான பொதுவான குணநலன்கள் மற்றும் பலன்கள்

இவர்கள் சின்ன சின்ன விஷயங்களை கூட பெரியதாக எடுத்துக் கொள்வார்கள். அன்பை வெளிப்படுத்தில் கில்லாடி. ஆனால் முன் கோபக்காரர்கள். பழைய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒரு காரியத்தை எடுத்தால் அதை சீராக முடிப்பவர்கள். இவர்கள் புதிதாக உருவாக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள். முன்னேற்றத்திற்காக மேலும் மேலும் முயற்சி எடுப்பவர். உடல்நலத்தை நல்லபடியாக கவனிப்பார்கள். அறிவை வளர்த்துக் கொள்ள ஆர்வம் உடையவர்கள்.

குடும்பம்

கன்னி ராசி உள்ளவர்கள் மகர ராசி, விருச்சக ராசி உள்ள மணமகனும், மணமகளும் இடையேயான சம்பந்தம் அதிக சுகம் தரும். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னி ராசி உள்ளவர்களின் உயர்வுக்கு தோழனும், குழந்தையும் சம்பந்தப்பட்டு இருப்பார். கன்னி ராசி உடையவர்களுக்கு அன்பு பெரியதாக இருக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் பெண் உதவி சம்பந்தப்பட்டு இருக்கும்.

கன்னி ராசிக்காரர்களின் குறைகள்

அதிகமாக சுயநலவாதிகளாக இருப்பார்கள். மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்காதவர்கள். அதனால் நஷ்டத்தில் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை கேலி செய்வதில் சந்தோஷமடைவார்கள். ஆனால் உறவு ஒழிந்துவிடும். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள அவசர படுவார்கள். ஆபத்தில் சிக்கிக் கொள்பவர்கள்.

கஷ்டங்கள் தீர்க்கும் உபாயம்

பணத்திற்காக லட்சுமியை பிரார்த்தனை செய்ய வேண்டும். புதன்கிழமை விரதம் இருந்தால் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை. இந்த நிறத்தில் உள்ள ஆடைகள் அணிந்து கொண்டால் மனதில் அமைதி ஏற்படும். பாக்கெட்டில் பச்சை கலர் கொண்டு இருந்தால் லாபம் அதிகரிக்கும். இவர்கள் உடையில் பச்சையும் மஞ்சளும் கலந்து உடை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கல்வி, படிப்பு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள். அதனால் படிப்பில் முன்னேற்றத்தை பெறுவர். கஷ்டப்பட்டு கடின உழைப்பில் வெற்றி பெறுபவர். புகைப்படத்துறை, வீடியோ, சங்கீதம் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உடையவராக இருந்தால் வெற்றி நிச்சயம்.

  • கன்னி ராசிக்காரர் பவளம், முத்து ஆகியன அதிர்ஷ்டக் கற்கள் ஆகும் .
  • அதிர்ஷ்ட தினம் புதன்கிழமை. அந்த நாளில் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்களுக்கு சனிக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சில சமயம் நல்ல நாட்களாக இருக்கும். செவ்வாய்க்கிழமை இவர்களுக்கு அதிர்ஷ்ட நாள் இல்லை.
  • கன்னி ராசி நேயர்களுக்கு அதிர்ஷ்ட எண் ஐந்து. 5, 14, 23, 32, 41, 50, 59, 68 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். இவை தவிர 1, 4, 6, 7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். 3 8 9 ஆகியவை அதிர்ஷ்டம் இல்லாத எண்களாகும். அதிர்ஷ்ட எண் கொண்ட நாட்களில் நல்ல காரியத்தை தொடங்க வேண்டாம்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4