இந்த வார ராசி பலன் 09-08-2021 To 15-08-2021

Reha
4 years ago
இந்த வார ராசி பலன் 09-08-2021 To 15-08-2021

மேஷ ராசி 

நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் கிடைக்கும். இது நாள் வரை இருந்த பிரச்சனைகள் தானாக விலகும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். நண்பர்களிடம் கவனம் தேவை. திருமணம் மற்றும் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்கள் வகையில் சில தொந்தரவுகள் வரும். கணவன் மனைவிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். குடும்பத்தில் திடீர் செலவுகள் வரும். மனதில் பல புதிய எண்ணங்கள் தோன்றும். ககுடும்ப விஷயங்களை யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது. உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும்.

பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி 

நீங்கள் எல்லா காரியங்களையும் சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அவசியம். அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. மிக முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் பிறக்கும். கணவன் மனைவி உறவுகளில் அன்பு பாசம் அதிகரிக்கும். உங்கள் பேச்சு திறமையால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் வந்து இணைவர். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்.

மிதுன ராசி 

உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அனுசரித்து போவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளை அளந்து பேசவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்ட காரியங்கள் இனிதே நடைபெறும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வழி கிடைக்கும். குடும்பத்தில் மாற்றங்கள் மூலம் முன்னேற்றங்கள் உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். மனதில் இருந்து வந்த சஞ்சலம் நீங்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். உத்யோகத்தில் உழைப்பால் முன்னேற்றம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்

கடக ராசி 

குடும்பத்தில் நல்லதும் கேட்டதும் கலந்தே நடக்கும். எதிர்பார்த்த செலவுகளை விட எதிர்பாராத செலவுகள் தான் அதிகம் இருக்கும். உங்கள் அருமை பெருமையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாற்றலாகி செல்லகூடும். வசதி வாய்ப்புகள் பெருகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து செல்லவும். வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்.

சிம்ம ராசி 

மனதில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் பற்றி கவலைபடாமல் இருக்கவும். குடும்பத்தில் இருந்து வந்த வாக்குவாதங்கள் அகலும். வீண் அலைச்சல் குறையும். உங்களுக்கு எதிராக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தை பெற முடியும். உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கும். பிரியமானவர்கள் வகையில் சுப விரயங்கள் நிறைய உண்டு. உறவினர்கள் சிலர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தாரின் தேவைகளை புரிந்து கொண்டு அதை நிறைவேற்ற முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

கன்னி ராசி 

பெரிய மனிதர்களின் அறிமுகமும் அவர்கள் மூலம் ஆதரவும் கிடைக்கும். புதிய முயற்சிகள் மூலம் வெற்றிகள் தேடி வரும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சொத்து வகையில் வில்லங்கம் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரும். மற்றவர்கள் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வர். உத்தியோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்

துலாம் ராசி 

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாகவே இருப்பர். எப்போதும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படவும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். குடும்ப வருமானம் அதிகரித்து தேவையான வசதிகளை பெருக்குவீர்கள். உடல் நலம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொது பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். சுப காரிய செலவுகள் அதிகமாகும். சோம்பேறித்தனத்தை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் பல எதிர்ப்புகள் நீங்கி நல்ல சுமூக உறவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும்.

பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி 

நீங்கள் திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்கள் ஆற்றலையும், திறமையும் பார்த்து, மற்றவர்கள் வியப்பார்கள். எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும்.மனோ தைரியம் அதிகரிக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புது வீடு கட்டுவது தொடர்பான முயற்சிகள் சீக்கிரத்தில் முடியும். உடன்பிறப்புகளின் வழியில் மனக்கசப்புகள் உண்டாகும். எதிர்பாராத வகையில் பொருள் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் சில நேரங்களில் உங்களுக்கு விரோதமாக செயல்படலாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.

தனுசு ராசி 

வாக்கு வன்மையால் எதை யும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் திட்டமிட்டபடி கரையங்களை செயலாற்ற முடியும். பிறரை நம்பாமல் உங்களை மட்டுமே நம்பி காரியத்தில் இறங்கவும். அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் தூரத்து பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்ப பொறுப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். குல தெய்வ கோயிலுக்கு சென்று நேர்த்தி கடனை செய்யவும். சில நேரங்களில் அவசரகதியில் மேற்கொள்ளும் முடிவுகளால் பிரச்சனைகள் உண்டாகலாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். முக்கிய பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்தினர் வருகை இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும்.

பரிகாரம் : நவகிரகத்தை தினமும் சுற்றி வரவும்

மகர ராசி  

எடுத்த காரியத்தை தங்கு தடையின்றி சிறப்பாக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகமான பலன் உண்டாகலாம். நீண்ட நாட்களாக முடங்கி கிடந்த காரியங்கள் வேகம் பெறும். பண வரவுகள் அதிக அலைச்சல் பிறகே வந்து சேரும், இதனால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். பயணங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகம் உண்டு. கணவன் மனைவிடையே இருந்த ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். புது சொத்துக்கள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி  

குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் விரைவில் கைகூடும். சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பர். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்து கொள்வது நல்லது. குடும்பத்தினருடன் ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முடியும். உங்கள் பேச்சிலும் செயலிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மனதில் இனம் புரியாத பயம் வந்து நீங்கும். உடல் நலனில் அக்கறைகொள்ள வேண்டி இருக்கும். உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். எதிரிகள் அடிபணிந்து போவர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உத்யோகத்தில் பணி சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

பரிகாரம் : வியாழன்தோறும் ஆஞ்சநேயரை வழிபடவும்

மீன ராசி 

நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் பெயரும், புகழும் உயரும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். நெருக்கமானவர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிரியமானவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4