ஒரு பெண், ஒரு ஆணை வெறுப்பதற்கு காரணம் என்ன?

Nila
2 years ago
ஒரு பெண், ஒரு ஆணை வெறுப்பதற்கு காரணம் என்ன?
  • பிடிக்கவில்லைன்னு சொன்னாலும் சும்மா தொந்தரவு செய்தால் வெறுப்பு வரும்.
  • நிறைய பெண்களை தெரிந்து வைத்திருப்பார்கள். கேட்டால் தோழின்னு சொல்வது. ஆனால் பழகுவது பார்த்தால் அப்படி தெரியாது.
  • அவங்ககிட்ட நாம் எதை எதிப்பாக்குறோம்னு தெளிவாக சொன்னாலும் அதற்கு முக்கியதுவம் தராமல் அலட்சியப்படுத்தும் போது.
  • பெண்ணுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடக்கும் பொழுது.
  • சத்தியத்தை உடைக்கும் போது, சொன்ன வார்த்தைக்கு மதிப்பளிக்காத போது.
  • பொய் சொல்றாங்கன்னு தெரிஞ்சி தான் பெண்கள் கேட்ப்பாங்க. ஆனால் அப்பவும் இன்னொரு பொய் சொல்லி சமாளிப்பது.
  • தனக்கான சரியான மரியாதை ஆணிடமிருந்து வராத போது.
  • நம்மை மற்றவர்களிடம் கேலி பண்ணி பேசுவது. கேட்டா ஜாலிக்கு தானே இதெல்லாம் எதுக்கு சீீீீரியஸா எடுத்துக்குறன்னு சொல்லும் போது.
  • தனக்கு முக்கியத்துவம் தராமல் வேறு யாருக்காவது அதிக முக்கியத்துவம் தரும் போது.
  • ஓவர் டாமினேட் பண்ணும் போது. பொண்ணுங்கன்னா எப்படி இருக்கணும்னு தெரியுமான்னு பேசுபவர்கள்.
  • வாழ்க்கைல எந்த கோல்லும் இல்லாமல் இருப்பவர்கள்.
  • வாயாலேயே வடை சுடுபவர்கள். தன்னை பற்றியே பெருமையா பேசுபவர்கள்.
  • ஒரே நேரத்தில் பத்து பொண்ணுங்களுக்கு "ஹை" மெஸேஜ் அணுப்பிட்டு நான் உன்கிட்ட மட்டும் தான் பேசுறேன்னு சொல்லும் போது.
  • நான் ஒரு ஆண். அதனால எந்த தப்பு வேணும்னாலும் பண்ணுவேன்ங்குற மனநிலையில் இருக்கும் ஆண்களை பார்த்தால் எரிச்சல் வரும்.