வெள்ளைக் குதிரையை கனவில் காண்பதன் பலன் என்ன..?

Nila
2 years ago
வெள்ளைக் குதிரையை கனவில் காண்பதன் பலன் என்ன..?

கனவில் நடப்பவைகள் அப்படியே உண்மையாக நடக்கும் அல்லது எதிர்மறையாக நடக்கும் என்பதும் எமது முன்னோர்கள் கூறி வைத்துப்போன ஒரு சோதிடம். 

இருந்தும் காலையில் காணும் கனவு பலிக்கும் எனபும் நம்பப்படுகிறது. அத்தோடு சில தியான ஆற்றல்கள் அதிகம் உள்ளவர்கள், கோவிலில் பூசை செய்பவர்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள். காணும் கனவுகளில் பல அற்தங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அந்தவகையில், இன்று நாம்ம் பார்க்க இருப்பது, கனவில் குதிரை வந்தால் என்னென்ன பலனை தரும்?

பலன்கள்

  • கனவில் நீங்கள் ஒரு குதிரையைப் பார்த்தால் வரும் காலங்களில் உங்களுக்கு எல்லாம் சரியாக நடக்கும் என்பதைக் குறிக்கிறது.
  • பெரிய அளவு பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பதை குறிக்கிறது.
  • பல குதிரைகளை நீங்கள் கனவு காண்பது செல்வம் அதிகரிப்பதை குறிக்கிறது.
  • குதிரைகள் ஓடுவதைப் போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.
  • குதிரை வண்டி பற்றி நீங்கள் காணும் கனவு நல்ல செய்தியை குறிக்கிறது.
  • குதிரை வண்டியில் ஒரு துணி இருப்பதை நீங்கள் கண்டால் அது இன்னும் அதிக நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.
  • நீங்கள் குதிரையில் சவாரி செய்வது போல கனவு கண்டால் அதிக புகழ் மற்றும் செல்வம் இரண்டையும் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.
  • விவாகரத்துப் பெற்ற பெண் குதிரையில் சவாரி செய்வது போல கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு மறுமணம் நடக்கப்போகிறது என்பதை குறிக்கிறது.
  • குதிரை பின்னோக்கி சவாரி செய்வது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் அது மோசமான சம்பவங்கள் நடக்கப்போவதை குறிக்கிறது.
  • நீங்கள் ஒரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென குதிரை மீது இருந்து குதிப்பது போல கனவு கண்டால் நீங்கள் புதிதாக செய்து வரக்கூடிய வேலையில் திருப்தியான முடிவுகள் கிடைக்காது என்பதை குறிக்கிறது.
  • குதிரையிலிருந்து கீழே விழுவதைப் போல நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதை குறிக்கிறது.
  • கனவில் ஒரு குதிரை உங்களை உதைப்பது போல கண்டால் நீங்கள் அதிகம் விரும்பும் ஒருவரால் புறக்கணிக்கப்படுகிறீர்கள் என்பதை குறிக்கிறது.
  • மேலும் உங்களுடைய உடல் நிலையிலும் பிரச்சனைகள் ஏற்பட போவதை குறிக்கிறது.
  • கனவில் நீங்கள் ஒரு குதிரையால் கடிக்கப்படுவதைப் போல கண்டால் விரைவில் உங்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பதை குறிக்கிறது.
  • கனவில் நீங்கள் ஒரு குதிரையை பின்தொடர்வது போல கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல கௌரவம் கிடைக்கக்கூடிய செயல்கள் நடைபெறும் என்பதை குறிக்கிறது.
  • நீங்கள் ஒரு குதிரையை வாங்குவது போலவோ அல்லது விற்பது போலவோ கனவு கண்டால் நீங்கள் மிகவும் நம்பும் ஒருவரால் ஏமாற்றப்படலாம் என்பதை குறிக்கிறது.
  • உங்களுடைய கனவில் நீங்கள் ஒரு குதிரைக்கு உணவளிப்பது போல கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு வரப்போகிறது என்பதை குறிக்கிறது.
  • நீங்கள் சரியாக அந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
  • நீங்கள் ஒரு குதிரையை தாக்குவது போல கனவு காண்பது நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் சிக்கல் ஏற்படும் என்பதை குறிக்கிறது.
  • ஏராளமானவர்களோடு சேர்ந்து குதிரை பந்தயத்தை காண்பது போல கனவில் கண்டால் உங்கள் நண்பர்களுடனான உறவுகள் மோசமடையும் என்பதை குறிக்கிறது.
  • நீங்கள் ஒரு குதிரையின் கழிவை உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் கூடவே இருக்கும் ஒரு நபர் எளிதில் தீர்த்து வைப்பார் என்பதை குறிக்கிறது.
  • ஒரு குதிரை சிறகுடன் இருப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் மிகப்பெரிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காண்பீர்கள் என்பதைக் குறிக்கிறது.
  • காயமடைந்த குதிரையை நீங்கள் உங்களுடைய கனவில் காண்பது விரைவில் உங்களுடைய நண்பர் ஒருவர் சிக்கலில் மாட்டப்போகிறார் என்பதை குறிக்கிறது.
  • இறந்த குதிரையை நீங்கள் உங்களுடைய கனவில் காண்பது மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்படும் என்பதை குறிக்கிறது.
  • ஒரு வெள்ளைக் குதிரையை நீங்கள் உங்களுடைய கனவில் காண்பது நீங்கள் செய்யும் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பதை குறிக்கிறது.
  • மேலும் அழகான பெண்ணுடன் உங்களுக்கு நல்ல உறவு ஏற்படும் என்பதையும் குறிக்கிறது.
  • அழுக்காக மெலிந்து இருக்கக்கூடிய ஒரு குதிரையை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்கள் நண்பர் அல்லது ஒரு பெண் உங்களுக்கு துரோகம் செய்வார் என்பதை குறிக்கிறது.
  • நல்ல அடர்ந்து இருண்டு இருக்கக்கூடிய குதிரையை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் அதிஷ்டம் உங்களுக்கு ஏற்படும். உங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்வு ஏற்படும்.