பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 49 இணையத்தளங்கள் முடக்கம்
Nila
4 years ago
ரஷ்யாவின் ஊடக கட்டுப்பாட்டகம் 49 இணையத்தளங்களை முடக்கியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெம்லனின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியுடன் தொடர்புடைய இணையத்தளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமது முன்னணி மீது அழுத்தங்கள் அதிகரிப்பதாக நவல்னியின் நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விலட்மிர் புட்டின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர் நவலினி.
முடக்கப்பட்ட இணையத்தளங்களில் நவல்னியின் பிரதான இணையத்தளமும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.