மட்டக்களப்பில் சூறாவளி தாக்கத்தால் 42 வீடுகள் சேதம்

Nila
4 years ago
மட்டக்களப்பில் சூறாவளி தாக்கத்தால் 42 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய மினி சூறாவளினால் வாகரை வாழைச்சேனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 42 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாட் தெரிவித்தார். 

இந்த மினி சூறாவளி நேற்று வியாழக்கிழமை (15) இரவு திடீரென வீசியதையடுத்து வீடுகளின் கூரைகளின் ஓடுகள் மற்றும் தகரங்கள் என்பன தூக்கி வீசியதையடுத்து  வாகரையில் 30 வீடுகள், வாழைச்சேனையில் ஒரு வீடு, கிரானில் 10 வீடுகளும், கோறளைப்பற்று மத்தியில் ஒரு வீடு உட்பட 42 வீடுகள் சேதமடைந்துள்ளன. 

இதில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இந்த குடும்பங்கள் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!