சிறிய வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்
Nila
4 years ago
கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் ஒன்பது உயிரிழப்புக்கள பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களில் ஏழு பேர் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்களால்தான் நடந்ததாகவும் ஏனைய இருவர் முச்சக்கர வண்டிகளில் பயணித்தவர்கள் எனவும் பொலிசார் கூறுகின்றனர்.
சிறிய வாகனங்களில் பயணிப்பவர்கள் வீதி விபத்துக்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தினமும் சுமார் 40 பேர் வீதி விபத்துக்களில் காயமடைகின்றனர்.
அதன்படி, சிறிய வாகனங்களில் பயணிப்பவர்கள் பாதுகாப்பான வீதிகளில் பயணிக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.