கட்டாரிலிருந்து இலங்கையை வந்தடைந்த பைசர் தடுப்பூசிகள்
Nila
4 years ago
கட்டாரிலிருந்து 26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 02.35 மணியளவில் 668 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அதனடிப்படையில் இதுவரை 52,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஃபைசர் தடுப்பூசிகளின் 26 ஆயிரம் டோஸ்கள் இலங்கைக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.