18 லீற்றர் எரிவாயு சிலிண்டர்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிப்பதில் கவனம்
எரிவாயு நிறுவனங்களால் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீற்றர் எரிவாயு சிலிண்டர்களுக்கு அதிகபட்சமாக 1150ருபாய் சில்லறை விலையை நிர்ணயிப்பதில் வர்த்தக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் இதுதொடர்பானவர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புதிய எரிவாயு சிலிண்டர் 1393 ருபாவிற்கு விற்கப்படுகிறது.
எரிவாயு சிலிண்டரை வாங்கும் நேரத்தில் நுகர்வோர் அதை லீற்றரில் அளவிட முடியாது என்பதால் எரிவாயு சிலிண்டரின் எடை 9.5 கிலோவாக பதிவு செய்யப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு நிறுவனங்கள் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரை 1493 ருபாவிற்கு விற்பனை செய்கின்றன.
குறித்த எரிவாயு சிலிண்டர்களில் 18 லீற்றர் எரிவாயுவை நிரப்பி சந்தைக்கு வெளியிட்டதால் நுகர்வோர் சிரமத்திற்கு உள்ளானர்கள்.
இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அதன்படி 18 லீற்றர் எரிவாயு சிலிண்டருக்கு அதிகபட்சமாக ரூ .1150 சில்லறை விலையை நிர்ணயிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.