சித்தங்கேணியில் வாள் வெட்டில் முடிந்த ஆலய பிரச்சனை

Nila
4 years ago
சித்தங்கேணியில் வாள் வெட்டில் முடிந்த ஆலய பிரச்சனை

யாழில்.ஆலய நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து ஆலய வளாகத்தினுள் வைத்தே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  

 யாழ்ப்பாணம் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கும் , மற்றுமொருவருக்கு ஆலயம் தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.  

 வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் ஆலய நிர்வாகத்தை சேர்ந்தவரை மற்றைய நபர் தன் உடமையில் மறைத்து வைத்திருந்த வாளினால் அவரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

 குறித்த நபர் தப்பியோடும் போது அவர் கொண்டு வந்திருந்த வாள் தவறி விழுந்துள்ளது. அதனை அங்கிருந்தவர்கள் மீட்டு வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அதேவேளை வாள் வெட்டுக்கு இலக்கான நபரையும் வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!