யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை
Nila
4 years ago
கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ்.நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.