24 மணித்தியாலங்களில் 507 பேருக்கு கொரோனா தொற்று
Nila
4 years ago
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 74 ஆயிரத்து 538ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 26 ஆயிரத்து 634 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மேலும் 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நேற்று அறிவித்தது.