15 வயது சிறுமி விவகாரம் - வங்கி முகாமையாளர் மற்றும் பொலிஸ் அதிகாரி கைது
Nila
4 years ago
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் வங்கி முகாமையாளர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு மற்றும் சிஐடியினர் இணைந்து நடாத்திய விசாரணையைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிறுமியின் தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கையின்படி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.