இலங்கையில் சீனி, பருப்பின் விலை குறைகிறதா?
Nila
4 years ago
பருப்பு மற்றும் சீனியின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், சதோச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக மாத்திரம் குறைந்த விலையில் பருப்பு மற்றும் சீனியை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்குள் இந்த நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் பருப்பினை 175 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் சீனியை 110 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.