நான்கு குற்றச்சாட்டுக்களுக்காக, 30 வயதுடைய நபர் பொலிஸாரினால் கைது
Nila
4 years ago
30 வயதுடைய நபர் ஒருவர் வல்வெட்டித் துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்துக்குப் புறம்பான வன்புணர்வு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை, படுகாயம் ஏற்படுத்தியமை, படுகாயமேற்படுத்தியமை மற்றும் அத்துமீறி வீடு புகுந்தமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சந்தேக நபர் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.