இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கு அனுமதி கிடைக்குமா?
Nila
4 years ago
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கு எதிர்வரும் வாரம் பெரும்பாலும் அனுமதி கிடைக்கும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கு கொரோனவை கட்டுப்படுத்தும் செயலணியினால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் எனினும் பஸ் உரிமையாளர்களின் சங்கம் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.