சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள், போதைப்பொருள் கடத்தல் கண்காணிக்க புதிய படை
வருங்கால உலகமே வருங்கால வாரிசுகளான சிறுவர்கள், சிறுமியர்களை நம்பியே இருக்கிறது.
இருந்தும் இந்த உலகம் அவர்களைத்தான் தூற்பிரயோகம் செய்கிறது. அதிகம் அவர்களின் அறியாத வயதில் அறிவு உள்ள வாலிபர்கள் மற்றும் வயோதிபர்களாலும் பெற்றோரின் கருத்து வேறுபாட்டாலும், அனேகமான சிறுவர், சிறுமியரே பாதிக்கப்படுகிறார்கள்.
அதை கருத்தில்க்கொண்டு, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், மிரட்டல், பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இலங்கை காவற்துறை கண்டுபிடித்து கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கான புலனாய்வுப் பிரிவை நிறுவுவதற்கு ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வையும் தகவல்களையும் வழங்க எதிர்காலத்தில் சிறப்பு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் போக்குவரத்து மற்றும் குற்றத் தடுப்புப்பிரிவு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், மிரட்டல், பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கான புலனாய்வுப் பிரிவை நிறுவுவதற்கு ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பொது மக்களுக்கு தகவல்களை வழங்க எதிர்காலத்தில் சிறப்பு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் போக்குவரத்து மற்றும் குற்றத் தடுப்புப்பிரிவு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.