பலரிடம் பணமோசடி செய்த பெண் கைது
Nila
4 years ago
பணம் மோசடி செய்த 49 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் கடுவலை- கொரதொட்ட பிரதேசத்தில் வைத்து நவகமுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
ஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, நவகமுவ பிரதேசத்தில் இரு இளைஞர்களிடம், 8 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு எதிராக 32 முறைப்பாடுகள் உள்ளதாகவும் நீதிமன்றத்தால் 17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.