கருவிலுள்ள சிசுவின் மூளையை சிறிதாக்கும் சிகா வைரஸ்
Nila
4 years ago
இந்தியாவில் பரவும் சிகா வைரஸ் இலங்கையில் பரவினால் அது கர்ப்பிணித் தாய்மார்களை அதிகம் பாதிக்கக்கூடும் என்று குழந்தைகளுக்கான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறுகிறார்.
இந்த வைரஸ் நுளம்புகளால் பரவக்கூடும் என்றும் கர்ப்பிணிப் தாய்மார்கள் பாதிக்கப்படும்போது பிறக்காத குழந்தைகளின் மூளை சிறியதாகிவிடும் என்றும் வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிகா வைரஸ் டெங்கு போன்ற ஆபத்தானது அல்ல என்றும் நோய் வேகமாக பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வரும் மக்கள் மூலம் இலங்கைக்கு சிகா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.