பருத்தித்துறையில் 23 பேருக்கு கொரோனா - 2ம் குறுக்குத் தெரு முடக்கப்படுகிறது

Nila
4 years ago
பருத்தித்துறையில் 23 பேருக்கு கொரோனா - 2ம் குறுக்குத் தெரு முடக்கப்படுகிறது

யாழ்.பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவில் எழுமாற்றாக தேர்வு செய்யப்பட்ட 60 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்பின் பெயரில் இன்று சனிக்கிழமை 2ம் குறுக்குத் தெருவில் எழுமாறாக தொிவு செய்யப்பட்ட 60 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. 

இதன்போது 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு கூறியுள்ளது. 

இவ்வாறு 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து,

53 குடும்பங்களை உள்ளடக்கிய 2ம் குறுக்குத் தெரு பகுதியை நாளை காலை 6 மணி தொடக்கம் முடக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த வீதியில் உள்ள 60 பேர் எழுமாறாக பரிசோதனை செய்யப்பட்டு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து சுகாதார பிரிவினரால் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியிடம் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக, பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெரு பகுதியை நாளை காலை 6 மணி தொடக்கம் முடக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!