நேற்றைய தினமும் 43 பேர் கொரோனாவுக்கு பலி
Nila
4 years ago
இலங்கையில் நேற்றைய தினமும் கொரோனா தொற்றால் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில், 07 ஆண்களும், 07 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 23 ஆண்களும், 06 பெண்களுமாக 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் ஆங்காங்கே சிற்சில பகுதிகளில் சிற்சிலருக்கு தடுப்பூசிகளை செலுத்திவரும் நிலையிலும் தினந்தோறும் உயிரிழப்புக்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றமையை காணமுடிகின்றது.
கொரோனா தொற்றால். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3434 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.