சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பதிவு செய்யப்படும்

Nila
4 years ago
சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பதிவு செய்யப்படும்

சிங்கப்பூரில் தற்போது ஒரு குழந்தை எங்கு பிறந்தாலும், ஒவ்வொரு பிள்ளையின் பிறப்பையும் பதிவு செய்வது விரைவில் கட்டாயமாகும்.

இதற்கு முன்னர் சட்டப்படி பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பிள்ளைகள் பிறப்பது அல்லது இறந்த நிலையில் பிறப்பது அல்லது இறப்பது ஆகியவற்றைப் பதிவுசெய்ய வேண்டும்.

ஆனால் அதைத் தெரிவிப்பது கட்டாயமல்ல.

முக்கியமாக, மருத்துவமனைகளைத் தவிர்த்து வேறு இடங்களில் பிறக்கும் பிள்ளைகளுக்கு மாற்றங்கள் பொருந்தும்.

பெற்றோர் கூடியவிரைவில் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்துக்கு நேரடியாகச் சென்று பதிவுசெய்யவேண்டும்.

அதனைச் செய்யத் தவறுவோர், 1,500 வெள்ளி வரையிலான அபராதத்தையும் ஒரு மாதம்வரை சிறைத்தண்டனையும் எதிர்நோக்கலாம்.

ஒரு குழந்தையின் பிறப்பு, இறப்புக் குறித்து தகவல் அளிப்பது மிக முக்கியமான முதல்படி என்று உள்துறை அமைச்சுக்கான துணையமைச்சர் பைஷால் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் சொன்னார்.

1937ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் இப்போது வரவிருக்கும் மாற்றங்கள் பொதுமக்களுக்கு மேலும் வசதியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

தகவல் அளிக்கும், பதிவு செய்யும் நடைமுறைகளை அது நேர்முகப்படுத்துவதாக இணைப் பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.

கொள்கைகளை வகுப்பதற்கும் கல்வி, வீடமைப்பு போன்ற பொதுச் சேவைகளை வழங்குவதற்கும் அந்தப் பதிவுகள் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!