இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படலாம் - அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
அதிக அளவிலான கொரோனா தொற்று காணப்படுவதால் நாட்டு மக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பயங்கரவாதத்தின் காரணமாகவும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில்,
நீங்கள் FDA அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டால், கொரோனா நோயால் பாதிக்கப்படுவதற்கும், கடுமையான அறிகுறிகளை உருவாக்குவதற்கும் உங்களுக்கு ஆபத்து குறைவாக இருக்கலாம்.
இருப்பினும், எந்தவொரு சர்வதேச பயணத்தையும் திட்டமிடுவதற்கு முன்பு, பயணிகளுக்கான CDC-யின் குறிப்பிட்ட பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்யுங்கள் என்று கூறியுள்ளது.
வெளியுறவுத்துறை, கொரோனா தொற்று காரணத்திற்காக மட்டுமின்றி, இலங்கையில் எந்தவேளையிலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில் அந்த நாட்டுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.