வடக்கு நிலங்களை சீனாவிற்கு வழங்கவுள்ளது என்பதை மறுத்த பிரதமர் அலுவகம்

Nila
4 years ago
வடக்கு நிலங்களை சீனாவிற்கு வழங்கவுள்ளது என்பதை மறுத்த பிரதமர் அலுவகம்

அரசாங்கம் வடக்கில் நிலங்களை சீனாவிற்கு வழங்கவுள்ளது என வெளியான தகவல்களை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

நெடுந்தீவில் உள்ள 40 ஏக்கர் நிலத்தையும் பழைய யாழ்ப்பாணத்தில் அரசாங்க கட்டிடமொன்றையும் சீனாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ச இந்த நோக்கத்திலேயே சமீபத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்மேற்கொண்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரதமர் அலுவலகம் இதனை நிராகரித்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீறிதரன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்த வேளை இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என அதிகாரிகள் தெரிவித்தனர் என பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஜி.காசிலிங்கம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் எந்த நிலத்தையும் சீனாவிற்கு வழங்கும் திட்டம் இல்லை ,யாழ் கச்சேரியின் பழைய கட்டிடத்தை சீனாவிற்கு வழங்கும் எண்ணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!