மிச்சிகன் செனட் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தொடர்பை கொண்ட முதல் முஸ்லிம் நபர்

#Election #America #State #Muslim #LANKA4 #Indian #L4
Prasu
2 hours ago
மிச்சிகன் செனட் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தொடர்பை கொண்ட முதல் முஸ்லிம் நபர்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அப்துல் எல்-சயீத், குடியரசுக் கட்சியின் மைக் ரோஜர்ஸைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

மருத்துவரும் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட அரசியல் செயற்பாட்டாளருமான அப்துல் எல்-சயீத் இந்த வெற்றிமூலம் அமெரிக்க வரலாற்றில் செனட்டராகத் தெரிவான முதல் முஸ்லிம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

வேய்ன் கவுண்டியின் முன்னாள் சுகாதாரப் பணிப்பாளரான எல்-சயீத், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்கான கடுமையான போட்டியில் ஹேலி ஸ்டீவன்ஸை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

தனது வெற்றி குறித்து பேசிய எல்-சயீத், “ஜனாதிபதி ஒருவரின் பெயரையோ அல்லது அவர் வழிபடும் முறையையோ வெளிப்படையாகக் கேலி செய்வது ஏன் என்று பிள்ளைகளுக்கு விளக்குவதற்குச் சிரமப்பட்ட பெற்றோர்கள் அனைவரிடமும், தீயவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பதைத் தெரிவியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரக் காலம் முழுவதும் தமக்கு எதிராக இஸ்லாமியர்களுக்கு எதிரான மற்றும் இனவாதக் கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோரையும் எல்-சயீத் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், அப்துல் அல்-சையத் தனது மனைவி மருத்துவர் சாரா ஜுகாகு மூலம் இந்தியத் தொடர்பைக் கொண்டுள்ளார்.

மருத்துவர் சாரா ஜுகாகு, மிச்சிகனில் பிறந்து வளர்ந்த ஒரு இந்திய-அமெரிக்க மனநல மருத்துவர் ஆவார். இவரது குடும்பத்தினர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரமான பட்கலைச் சேர்ந்தவர்கள்.

எகிப்திய வம்சாவளியைச் சேர்ந்த அல்-சையத், இருபது ஆண்டுகளுக்கும் மேலான திருமண வாழ்க்கைக்குப் பிறகு இந்திய கலாச்சாரத்துடன் தனக்குள்ள நெருக்கமான பிணைப்பைக் குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணல்களில், தான் "இந்தியப் பெண்களால் சூழப்பட்டிருப்பதாகக்" கூறிய அவர், தான் "அரபு இனத்தவரை விட இந்தியராகவே அதிகம் இருக்கலாம்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!