பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட VJ சித்துவின் ‘டயங்கரம்’ படத்தின் டீசர் வெளியீடு

#Actor #TamilCinema #LANKA4 #Movie #Youtuber #L4
Prasu
2 hours ago
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட VJ சித்துவின் ‘டயங்கரம்’ படத்தின் டீசர் வெளியீடு

யூடியூப் தளத்தில் தனது 'VJ Siddhu Vlogs' மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த VJ சித்து, இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் 'டயங்கரம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வெல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் VJ சித்துவுடன் இணைந்து நட்டி (நடராஜ்), நிதின் சத்யா, 'வாட்ஸ்அப்' மணி, ஹர்ஷத் கான், இளவரசு, காளி வெங்கட் மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டீசரில் வரும் வசனங்கள் மற்றும் காட்சிகள், இது ஒரு நண்பர்கள் கூட்டத்தின் 'சம்பவம்' நிறைந்த காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த கலாட்டாவாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!