நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை – இன்று உத்தரவு!

#SriLanka #Namal Rajapaksha #LANKA4 #Public #Court #Bail
Abi
3 hours ago
நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை – இன்று உத்தரவு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்று (03) பிறப்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம, கடந்த 28ஆம் திகதி இன்று தீர்மானம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள ட்ரான்ஸ்வேர்க் சதுக்கத்திலுள்ள காணியை பல்நோக்குத் திட்டமொன்றுக்காக கிரிஷ் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததாக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 41 பேருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிகைகள் இம்மாதம் 16ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக ஹம்பாந்தோட்டை பிரதம நீதவான் இசுறு நெத்திகுமார அறிவித்துள்ளார்.

அன்றைய தினம் அனைத்து சந்தேகநபர்களையும் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!