நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

#SriLanka #Rain #LANKA4 #Warning
Abi
1 hour ago
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இன்று (03) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!