மருதானையில் விசேட சுற்றிவளைப்பு – 21 வெளிநாட்டவர்கள் கைது!
#SriLanka
#ARREST
#Police
#Investigation
#LANKA4
Abi
2 hours ago
மருதானை பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, உரிய கடவுச்சீட்டு ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாகக் கூறப்படும் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நிதி மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 12 சீனப் பிரஜைகள், 6 பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் 3 இந்தியப் பிரஜைகள் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.