புளோரிடாவில் சிறிய ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் பலி

#Death #Flight #Accident #America #LANKA4 #Florida #L4
Prasu
3 hours ago
புளோரிடாவில் சிறிய ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் பலி

புளோரிடாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் வணிக ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஒன்பது பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

செல்வந்தர்கள் வசிக்கும் பாம் பீச் கவுண்டி பகுதியில் உள்ள, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஓய்வு விடுதியான மார்-அ-லாகோவிலிருந்து சுமார் ஒன்பது மைல் (14 கி.மீ) தொலைவில் உள்ள கிரெஸ்ட்ஹேவன் அருகே விபத்து நிகழ்ந்தது.

டெக்சாஸின் ஆஸ்டினிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், பஹாமாஸை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளாகும் முன், அந்த ஜெட் விமானம் வினாடிக்கு நூற்றுக்கணக்கான அடி வேகத்தில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக விமானப் பயணத்தின் பகுப்பாய்வு காட்டுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!