'முரசு' புயல் தீவிரமடைந்தது – மீனவர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

#SriLanka #Fisherman #LANKA4 #Warning #Cyclone #Safety
Abi
2 hours ago
'முரசு' புயல் தீவிரமடைந்தது – மீனவர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘முரசு’ புயல் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (02) வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல், நேற்று (01) இரவு 11.30 மணியளவில் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இப்புயல் அடுத்த சில மணித்தியாலங்களில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இன்று நள்ளிரவு முதல் நாளை (03) அதிகாலை வரையான காலப்பகுதியில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குக் கரையோரப் பகுதியில் கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 10 முதல் 17 வரையான வடக்கு அட்சரேகைகளுக்கும், 80 முதல் 90 வரையான கிழக்கு தீர்க்கரேகைகளுக்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

புயலின் தாக்கம் காரணமாக கடற்பரப்புகளில் ஆபத்தான நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பயணிகள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!