இன்று முதல் எரிபொருள் விலை உயர்வு
#SriLanka
#prices
#Fuel
#LANKA4
#petrol
#L4
#Diesel
Prasu
2 hours ago
இன்று முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
- ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 397ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- லங்கா சுப்பர் டீசல் 4 லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 543 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 424 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- பெட்ரோல் 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி, லீற்றர் ஒன்று தொடர்ந்து 285 ரூபாய் என்ற நிலையிலேயே விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.