கிளிநொச்சியில் 11.8 கோடி நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

#SriLanka #Kilinochchi #Road #LANKA4 #Devolopment #L4
Prasu
11 hours ago
கிளிநொச்சியில் 11.8 கோடி நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய வீதிகளைப் புனரமைக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இந்த அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,

  • உருத்திரபுரம் மேற்கு 5ஆம் குறுக்கு வீதி அபிவிருத்திக்காக ரூ.6.29 கோடி நிதி
  • இரத்தினபுரம் பிள்ளையார் கோவில் வீதி அபிவிருத்திக்காக ரூ.5.51கோடி நிதி

இவ்விரு வீதிகளுக்குமான மொத்த நிதி ஒதுக்கீடு சுமார் 11.81 கோடி ரூபாய்.

வீதிகள் என்பது வெறுமனே போக்குவரத்துக்கான பாதைகள் மட்டுமல்ல; மக்களின் அன்றாட வாழ்வாதாரம், மாணவர்களின் கல்விப் பயணம், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்லும் வசதிகள் ஆகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!