இன்றைய ராசிபலன் (18.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (18.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் தடை விலகும். கையில் பணம் புரளும். கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். பரணி: நெருக்கடி நீங்கும். வெளியூர் லாபம் தரும். எடுத்த வேலையை முடியும். ஆதரவாளர்களால் அதிகரிப்பர். கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாய் இருந்த வேலை எளிதாக முடியும். மதிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். திறமை வெளிப்படும். ரோகிணி: வருமானத் தடை விலகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். மிருகசீரிடம் 1,2: தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். உழைப்பாளருக்கு வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: சங்கடம் விலகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். திருவாதிரை: பண நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். புனர்பூசம் 1,2,3: பெரிய மனிதர் ஒத்துழைப்பால் வேலை நடக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் அவசியம்.

கடகம்

புனர்பூசம் 4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். வேலை இழுபறியாகும். பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். பயணத்தில் நிதானம் தேவை. ஆயில்யம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும். வேலையில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

சிம்மம்

மகம்: முன்னேற்றமான நாள். செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். பூரம்: வேலை எளிதாக நடக்கும். நண்பர்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பர். நினைப்பது நடக்கும். முன்னேற்றமான நாள். உத்திரம் 1: நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர். பயணம் லாபம் தரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். வருமானம் உயரும். அஸ்தம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். வரவேண்டிய பணம் வரும். சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும். முதலாளியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

துலாம்

சித்திரை 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். நேற்றைய பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். சுவாதி: சொத்து விவகாரத்தில் எதிர்பார்த்த முடிவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும் அவசியம்.

விருச்சிகம்

விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பமும் செயல்களில் தடைகளும் ஏற்படும். புதிய முதலீடு வேண்டாம். அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பது நல்லது. கேட்டை: பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிறு வியாபாரிகள் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

தனுசு

மூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள்.மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வருவாய் வரும். பூராடம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்திராடம் 1: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். மனதில் தைரியம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றமடையும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தை விரிவு செய்வீர். உங்களுக்கிருந்த தடை விலகும். கையில் பணம் புரளும். திருவோணம்: குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபமாகும். அவிட்டம் 1,2: வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பாராட்டும் பரிசும் உங்களைத் தேடி வரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சதயம்: பழைய பிரச்னை தீரும். வரவேண்டிய பணம் வரும். மனதில் தெளிவு உண்டாகும். பயணம் ஆதாயம் தரும். பூரட்டாதி 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். புதிய முயற்சியில் இறங்கும் முன் யோசிக்கவும்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். மனதில் குழப்பம் வரும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உத்திரட்டாதி: செலவு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். பண விவகாரங்களில் கவனம் தேவை. ரேவதி: செயல்களில் நிதானம் அவசியம். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!