இலங்கையின் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கையின் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு!

இலங்கையின் ஆடை மற்றும் தைக்கப்பட்ட ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியானது 2024 டிசம்பரில் காணப்பட்ட 424.18 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பரில் 5.43% இனால் அதிகரித்து 447.21 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. 

மூன்று பிரதான இலக்குச் சந்தைகளிலும் வளர்ச்சி பதிவாகியுள்ளது. 

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 6.49% அதிகரித்து 178.29 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. 

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (பிரித்தானியா தவிர்ந்த) ஏற்றுமதி 6.76% வளர்ச்சியடைந்து 141.00 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (132.07 மில்லியன் டொலர்களிலிருந்து) அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி 12.95% அதிகரித்து 55.12 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (48.80 மில்லியன் டொலர்களிலிருந்து) உயர்ந்துள்ளது.

ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 4.06% வீழ்ச்சியடைந்து 72.80 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (75.88 மில்லியன் டொலர்களிலிருந்து) குறைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாத ஏற்றுமதியானது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 23.03 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.

2025 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், மொத்த ஏற்றுமதியானது 2024 ஆம் ஆண்டின் 4,761.02 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 5.42% அதிகரித்து 5,019.20 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 258.18 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வளர்ச்சியாகும்.

ஆடை ஏற்றுமதிக்கு மேலதிகமாக, ஜவுளி வகைகளின் ஏற்றுமதி ஆண்டுக்கு 526.33 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

இதன் மூலம் இத்துறையின் மொத்த ஏற்றுமதி பெறுமதி அந்த ஆண்டில் 5,505 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. 

சந்தை ரீதியாகப் பார்க்கையில், முழு ஆண்டுக்கான வலுவான வளர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (பிரித்தானியா தவிர்ந்த) கிடைத்துள்ளது.

இது 12.48% அதிகரித்து 1,576.39 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (1,401.50 மில்லியன் டொலர்களிலிருந்து) உயர்ந்துள்ளது.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2.15% வளர்ச்சியடைந்து 1,947.37 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (1,906.39 மில்லியன் டொலர்களிலிருந்து) அதிகரித்துள்ளது.

அதேவேளை, பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி பெரிய மாற்றமின்றி சீராகக் காணப்பட்டதுடன், அது 0.74% உயர்ந்து 679.66 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (674.70 மில்லியன் டொலர்களிலிருந்து) பதிவாகியுள்ளது. 

ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 4.80% அதிகரித்து 815.78 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (778.43 மில்லியன் டொலர்களிலிருந்து) உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், டிசம்பர் மாத ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சுமார் 71% பங்கினைக் கொண்டிருந்தன.

அத்துடன், அந்த மாதத்தின் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கினையும் இவையே வழங்கியுள்ளன.

இந்தச் செயல்திறன் குறித்து, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) கருத்து தெரிவிக்கையில், “ஆண்டு இறுதியில் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளமையானது, எமது பிரதான சந்தைகளில் இத்துறை கொண்டுள்ள ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது. 

இதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆண்டு முழுவதும் மிக வலுவான உத்வேகத்தை வழங்கியுள்ளது. டிசம்பர் மாதத்தில் பிரித்தானியாவில் காணப்பட்ட உயர்வு மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் தொடரும் வளர்ச்சி ஆகியன ஊக்கமளிக்கின்றன.

அதேவேளை, டிசம்பர் மாதத்தில் ஏனைய சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவானது, எமது கேள்வித் தேவையை (Demand) பன்முகப்படுத்துவதும், பாரம்பரியமற்ற சந்தைகளை வலுப்படுத்துவதும் ஒரு முன்னுரிமைப் பணியாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகின்றது.” என தெரிவித்தது.

“இந்த எண்கள் வரவிருக்கும் மாதங்களுக்கான செயல்திட்டத்தை வகுத்துள்ளன. வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள, போட்டித்தன்மையை மேம்படுத்துதல், விநியோக நம்பகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் சீரான தரம் மற்றும் பொறுப்பான உற்பத்தியின் ஊடாக கொள்வனவாளர்களின் நம்பிக்கையை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இத்துறை தொடர்ந்து கவனம் செலுத்தும்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!