விவசாயத் துறையை வழமைக்குக் கொண்டுவர துறைசார் கலந்துரையாடல்!

#SriLanka #discussion #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
விவசாயத் துறையை வழமைக்குக் கொண்டுவர துறைசார் கலந்துரையாடல்!

டிட்வா சூறாவளியினால் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியின் தலைமையில் கடந்த 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா என அந்தந்த அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகளிடம் குழுவின் தலைவர் வினவினார்.

அதற்கமைய, ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாகக் குழுவிற்குச் சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், அந்தந்த அமைச்சுகளின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகளும் தமது நிறுவனங்கள் வசமுள்ள தரவுகளைக் குழுவில் சமர்ப்பித்தனர்.

தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அந்தந்தச் சேதங்களுக்காக வழங்கப்படும் இழப்பீடுகள் மற்றும் அந்த இழப்பீடுகளைக் கணக்கிடும் முறை குறித்துக் குழுவின் தலைவர் வினவினார். 

அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இழப்பீடு வழங்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதன் காரணமாக அந்தத் தகவல்களைச் சமர்ப்பிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர். 

இதன்போது, இழப்பீடு வழங்குவதற்கு ஒரு முறையான பொறிமுறையைத் தயாரிப்பது முக்கியம் எனச் சுட்டிக்காட்டிய குழு, இழப்பீடு வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியது.

அத்துடன், டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்தந்த அமைச்சுகளினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தச் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா, ரொஷான் அக்மீமன, எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் உபுல் கித்சிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!