ஏலத்தில் இயேசு ஓவியத்தை விற்று குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்கிய டிரம்ப்
#children
#America
#picture
#Auction
#Trump
Prasu
1 hour ago
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ இல்லம் அமைந்துள்ளது.
இங்கு புத்தாண்டு தினத்தையொட்டி டொனால்டு டிரம்ப் சிறப்பு விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது இயேசு கிறிஸ்துவின் ஓவியம் வரையப்பட்டது.
அந்த ஓவியம் ஏலம் விடப்பட்டது. இதன்படி இயேசு ஓவியம் 2.75 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.
அந்த பணத்தின் ஒரு பகுதி செயிண்ட் ஜூட் குழந்தைகள் மருத்துவமனைக்கும், மற்றொரு பகுதி உள்ளூர் ஷெரீப் அலுவலகத்திற்கும் பிரித்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )