மரண அறிவித்தல் - அமரர் இரவீந்திரநாதன் குமாரசிங்கம்!
யூனியன் கல்லூரியின் பழைய மாணவனும், சகலதுறை நட்சத்திர விளையாட்டு வீரருமான, ஓய்வுபெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர் இரவீந்திரநாதன் குமாரசிங்கம் (74 O/L, 77 A/L) அவர்கள் தனது 68-ஆவது வயதில், 29.12.2025 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார் என்பதை மிகுந்த துக்கத்துடனும் ஆழ்ந்த மனவேதனையுடனும் அறிவித்துக் கொள்கின்றோம்.
வீமன்காமம் வடக்கை பிறப்பிடமாகவும், ஓமந்தை – வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எமது உறவினரான அன்னார்,
காலஞ்சென்ற ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்
திரு. குமாரசிங்கம் – திருமதி. தங்கம்மா தம்பதியரின் அருமை மகனும்,
ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி. வாசுகி இரவீந்திரநாதன் (CCTMS) அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனன் இரவீந்திரநாதன் (சட்டத்தரணி – வவுனியா) மற்றும் பிரியங்கா இரவீந்திரநாதன் (சட்டத்தரணி – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கீர்த்தனன் சரூபா (சட்டத்தரணி – வவுனியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான குமாரசிங்கம் அருந்தவநாதன் ( சிறந்த விளையாட்டு வீரர் 72 O/L, 75 A/L – ஓய்வுபெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம்) மற்றும் காலஞ்சென்ற அருட்செல்வி நந்தகுமார் (79 O/L, 82 A/L – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் சைவ முறைப்படி 30.12.2025 (செவ்வாய்கிழமை) அன்று ஓமந்தை அரசவீட்டுத் திட்டம் – முதலாவது ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் பகல் 12.30 மணி முதல் 1.45 மணி வரை நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து, அதே நாளில் பிற்பகல் 2.00 மணியளவில்பூந்தோட்டம் சைவ மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரை இழந்து துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தயவுசெய்து இம்மரண அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
