காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை உயிரிழப்பு!

#SriLanka
Mayoorikka
6 hours ago
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை உயிரிழப்பு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

 வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

 அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடியிருந்தார்.

 இந்நிலையில் தனது மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!