பூசா உயர்மட்ட பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து தொலைபேசிகள் மீட்பு!
#SriLanka
#Police
#Prison
#Mobile
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
பூசா உயர் பாதுகாப்பு சிறையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் சிறப்புப் படை (STF) நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கைதிகள் மறைத்து வைத்திருந்த தொலைபேசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் இருந்து நிலத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பல தொலைபேசிகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் சிறப்பு படை தெரிவித்துள்ளது.
பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குற்றவாளிகள் சிறைச்சாலைக்குள் இருந்து மொபைல் போன்களைப் பயன்படுத்தி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக விசாரணைகளில் சமீபத்தில் தெரியவந்ததை தொடர்ந்து மேற்படி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
